Wednesday 27 February 2013

Salangaiyittal Oru Maadhu - Mythili Ennai Kadhali ஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம்

படம் : மைதிலி என்னை காதலி 
பாடியவர் : எஸ்பி பாலசுப்ரமணியம் 
இயற்றியவர் : டிராஜேந்தர் 
இசை : டிராஜேந்தர் 
வெளியான ஆண்டு : 1986
ராகம் : பூபாள ராகம்

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

ஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்

சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழ ரசம்
அதைக் காண்பதில் எந்தன் பரவசம்

ஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் ஆட தகதிமிதோம்


சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு

தத்தத்தகதிமி தத்தத்தகதிமி தத்தத்தகதிமி தோம்
தாதுத ஜந்தரி தா தததுத ஜந்தரி தை தாதுத ஜந்தரி தததுத ஜந்தரி
தக்க தீங்கிணதோம் ததீங்கிணதோம் ததீங்கிணதோம் தா

தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி
தாமரைப் பூ மீது விழுந்தனவோ
இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகந்தான் உன் கண்களோ
காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துக்கிரு
கால்கள் முளைத்ததென்று நடை போட்டாள்
ஜதி என்னும் மழையினிலே
ரதி இவள் நனைந்திடவே
அதில் பரதம் தான் துளிர்விட்டு
பூப்போலப் பூத்தாட
மனம் எங்கும் மணம் வீசுது - எந்தன்
மனம் எங்கும் மணம் வீசுது

சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு

நாதிந்தின்னா நாதிந்தின்னா நாதிந்தின்னா நாதிந்தின்னா
தித்தா திகுதிகு தித்தா திகுதிகு தித்தா திகுதிகு தித்தா திகுதிகு
திகதானதானதா திகதானதானதா திகதானதான

சந்தனக் கிண்ணத்தில் குங்குமச் சங்கமம்
அரங்கேற அதுதானே உன் கன்னம்
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்
இடையில் பின்னழகில்
இரண்டு குடத்தைக் கொண்ட
புதிய தம்புராவை மீட்டிச் சென்றாள்
கலை நிலா மேனியிலே
சுளை பலா சுவையைக் கண்டேன்
அந்தக் கட்டுடல் மொட்டுடல்
உதிராமல் சதிராடி
மதிதன்னில் கவி சேர்க்குது
எந்தன் மதிதன்னில் கவி சேர்க்குது

சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழ ரசம்
அதைக் காண்பதில் எந்தன் பரவசம்
ஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்

சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு

0 comments:

Post a Comment

 
Copyright © . தமிழ் திரைப்பட பாடல் வரிகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger